Publisher: தமிழினி, சென்னை .
Published: Jan, 2007
Category: கட்டுரை
Pages: 290
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவட்டாறு ஊரில் உள்ள ஆதிகேசவர் கோவிலின் வரலாறு இக்கோயில் நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய ஊரில் இக்கோவில் உள்ளது நூலாசிரியர் இக்கோவில் பற்றி ஓர் ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து எழுதிய நூல் இதுவள நீர் வாட்டாறு வானியல் வழிவந்த வாட்டாறு மலை மாடத்து வாட்டாற்றான் அரவணை மேல் பள்ளி கொண்டவன் இரணியனை மார்பு இடந்த வாட்டாறு பூசகரும் பணி உடையவரும் நித்திய பூஜையும் விழாக்களும் சிற்பங்களும் ஓவியங்களும் கோவில் கல்வெட்டுகளில் செய்திகள் என்னும் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது பின்னிணைப்பில் கோவிலில் தொடர்பான செய்திகள் உள்ளன 60 பக்கங்களில் நூற்றுக்கு மேற்பட்ட " படங்கள் உள்ளன கோவில் சுவர் ஓவிய படமும் உண்டு இந்நூலுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி இ.ஆ.ப அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார் இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது இதன் மலையாள மொழி பெயர்ப்பை சுகுமாரன் என்பவர் செய்திருக்கிறார் மலையாளத்தில் வெளியான நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.