Publisher: Sudarsan Books - Crafts, Nagercoil.
Published: Oct, 2021
Category: கட்டுரை
Pages: 16
கன்னியாகுமரி மாவட்டத்தில் 133 ஊர்களில் கோவில்களிலும் பிற இடங்களிலும் காணப்படுகின்ற 801 கல்வெட்டுக்களின் சுருக்கப் பதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் கல்வெட்டை பேராசிரியர் மனோன்மணியம்சுந்தரனார் கண்டுபிடித்தார் இது 1885 அளவில் இருக்கலாம் இதிலிருந்து இன்று வரை திருவிதாங்கூர் அரசும் தமிழக அரசும் பல கல்வெட்டுக்களை கண்டுபிடித்திருக்கின்றனர் இவற்றில் T.A.S 9 தொகுதிகளிலும் 318 கல்வெட்டுக்கள் வெளியாகியுள்ளன தமிழக அரசு தொல்லியல் துறை ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ளது இவற்றில் 351 அளவில் கல்வெட்டுக்கள் உள்ளன எஞ்சிய கல்வெட்டுக்களை செம்பவளம் ஆய்வுத் தளம் கண்டுபிடித்து பாதுகாத்து வருகின்றது இந்த எல்லாக் கல்வெட்டுகளையும் ஒரே புத்தகத்தில் கொண்டுவரவேண்டும் என்ற பலரின் விருப்பம் காரணமாக இந்த நூல் எழுதப்பட்டது இது ஆய்வு நூல்அல்ல இது மேற்கோள் நூல்.