Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
Published: Dec, 2015
Category: கட்டுரை
Pages: 104
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கவிதைகள் அல்லாத இன்னொரு பக்கத்தை கூறும் நூல் கவிமணியின் வாழ்வும் பணியும் , கவிமணியின் கவிதைகள் | வரலாற்று ஆய்வாளர் , கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும் கவிமணியின் சமகால நோக்கு ஆகிய ஐந்து கட்டுரைகள் கொண்டது. பின்னிணைப்பில் கவிமணி தொடர்பாக ஆறு செய்திகள் உள்ளன முக்கியமாக கவிமணியைப் பற்றி வந்த நூல்களின் பட்டியல் உள்ளது கவிமணி என்ற கவிஞர் தமிழகத்தில் குழந்தைக் கவிஞராக பரவலாக அறியப்பட்டாலும் அவர் சிறந்த வரலாற்று ஆய்வாளர் கல்வெட்டு ஆய்வாளர் ஓலை ஆவணங்களை சேகரித்தவர் வரலாறு கல்வெட்டு தொடர்பாக ஆங்கிலத்திலேயே விரிவாக எழுதியவர் என்னும் இன்னொரு பக்கத்தை கூறுவது இந்த நூல்.