Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
Published: Dec, 2017
Category: கட்டுரை
Pages: 194
ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு. எதிர் ரோமம் உடையவன் என்ற முதல் கட்டுரை அரவாணி பற்றியது. 35 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரை நாட்டார் வழக்காற்றியலில் அரவான் பற்றிய செய்திகளை தொகுத்து கூறுகிறது. அதோடு அரவாணிகள் தொடர்பான அவர்களின் வழிபாடு இன்றைய நிலை என சமகால பார்வையுடன் செல்கிறது. இக்கட்டுரையில் முப்பத்தாறு அரிய அடி குறிப்புகள் உள்ளன.
பொன்னுருவி மசக்கை என்னும் இரண்டாம் கட்டுரை கர்ணனின் மனைவி பொன்னுருவியின் கர்ப்பகால நிகழ்ச்சியை விவரிப்பது. நாட்டார் மரபில் கர்ணன் எப்படி நினைக்க படுகிறான் என்று குறிக்கப்படுகிறது. இது விரிவாகவே வருகிறது.
அரிச்சந்திரன் பற்றிய கதைப்பாடல்கள் நாடகம் சிந்து கும்மி பாடல்கள் ஆகியவற்றில் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது அரிச்சந்திர சாமி கதை என்ற கட்டுரை. புகழேந்தி கூறும் தமயந்தியின் வித்தியாசமானவள் நாட்டார் மரபு தமயந்தி. இதுபற்றிய கட்டுரை தமயந்தியின் ஆவேசம்.
நாட்டார் மரபில் வான்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர் எப்படி வருகின்றனர் என்பது பற்றிய செய்திகள் அடங்கிய கட்டுரை இறுதிக் கட்டுரை. ஞான வாசிஷ்டம் தத்துவ நூலாக இருந்தாலும் இதிலுள்ள பல கதைகள் நாட்டார் மரபில் உள்ளன என்னும் புதிய செய்தி இக்கட்டுரையில் கூறப்படுகிறது.
அரிச்சந்திரன் கதை பட்டியல் உட்பட 4 பின்னிணைப்புகள் இந்நூலில் உள்ளன. இத்துடன் 52 மிகப்பழைய வரைபடங்களும் மூன்று புதிய படங்களும் இந்நூலில் உள்ளன.
இந்த நூலைப் பற்றிய விரிவான விமர்சனத்தை பிரபஞ்சன் இந்து தமிழ் நாளிதழில் எழுதி இருக்கிறார் ( 2018 பிப்ரவரி 27 ). அவர் அ. கா. பெருமாள் நாட்டார் மரபின் மனிதர்களை இந்நூலில் தேடிக்கண்டு தொகுத்திருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு பெரும் பங்காற்றியவர். நாட்டார் கலைகளின் சேகரிப்பதற்காக தமிழகம் முழுக்க பயணம் செய்தவர். தமிழ் பண்பாட்டுக்கும் கூத்து கலை வளர்ச்சிக்கும் செழுமையாக பங்களித்த கதைகள் நாடகங்கள் சடங்குகள் எனபலவற்றை குறித்த பல புதிய பதிவுகள் இந்நூலில் வெளிவந்திருக்கிறது என்பது இதன் சிறப்பு என்கிறார்.