Publisher: தமிழினி, சென்னை.
Published: Nov, 2003
Category: கட்டுரை
Pages: 240
நாட்டார் தெய்வக் கருத்தாக்கங்கள் , வில்லிசைப் பாடல்களின் வழி நாட்டார் தெய்வங்களின் தோற்றமும் நிலைப்பாடும், வில்லிசைப் பாடல்களில் சிவன் குறித்த செய்திகள் , முத்தாரம்மன் கோவிலில் சமூக பங்களிப்பு , சுடலைமாடன் கதையும் வழிபாடும் , வலங்கை இடங்கை சாதி கதைப் பாடல்களும் வில்லிசை பாடல்களின் பதிப்பும் வேறுபாடும் என்னும் எட்டு கட்டுரைகள் கொண்ட நூல் பின்னிணைப்பில் அச்சில் வந்த வராத வில்லிசை பாடல்களின் பட்டியல் விரிவாக உள்ளது நாட்டார் தெய்வ வழிபாடு குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த நூல்களின் பட்டியல் பின்னிணைப்பில் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் இந்நூலுக்கு நகர் நடுவே நடுக்காடு என்னும் தலைப்பில் முப்பத்தி மூன்று பக்க அணிந்துரை எழுதியுள்ளார் நாட்டார் தெய்வம் பற்றி வந்த நூற்களில் திறமான நுட்பமான ஆழமான கருத்துக்களை கொண்ட நூல் என்று இந்நூலை தினமணி பத்திரிகையை பாராட்டியுள்ளது.