Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
Published: May, 2016
Category: கட்டுரை
Pages: 94
மனோன்மணியம் சுந்தரனார் பற்றிய ஆழமான சிறிய நூல். வாழ்வும் பணியும் நாடகாசிரியர் ஆராய்ச்சியாளர் என்னும் நான்கு இயல்களும் 14 பின் இணைப்புகளும் இதில் உண்டு. சுந்தரனார் எழுதிய நூற்களின் பட்டியல் வெளிவராத செய்திகள் இந்நூலில் உள்ளன. ஆங்கில இந்து நாளிதழ் (24 ஜூலை 2016) பா. கோலப்பன் விமர்சித்திருக்கிறார். அவர் இந்நூலில் அபூர்வமான தகவல்கள் உள்ளன. நுட்பமான மொழிநடை உடையது. சுந்தரனாரின் இன்னொரு பக்கத்தை இந்நூல் காட்டுகிறது என்று எழுதியுள்ளார்.
புதிய தலைமுறை வார இதழ் (2016 ஆகஸ்ட்) மா. கி. ரமணன் என்பவர் பாராட்டிப் பேசியிருக்கிறார். இந்த நூல் அரிய தகவல்களை கொண்ட ஆழ்ந்த படிப்பின் சேகரிப்பின் வெளிப்பாடு என்று இப்பத்திரிகை கூறுகின்றது.