Publisher: காவ்யா பதிப்பகம், சென்னை.
Published: Apr, 2018
Category: கட்டுரை
Pages: 145
தலைசிறந்த தமிழ் அறிஞரானவையாடிவிட் பிள்ளையின் தமிழ் இலக்கியக் காலக் கணிப்பை விரிவாகக் கூறும் நூல் பொதுவாக தமிழ் இலக்கியங்களின் காலத்தை பின்னே தள்ளியவர் என்ற குற்றச்சாட்டு இவர் பெயரில் உண்டு இதனால் இவரைப் பற்றிய நூற்கள் மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன இந்த நூலில் வையாபுரிப் பிள்ளையின் கால் ஆராய்ச்சி பற்றி விரிவான 24 பக்க முகவுரைஉள்ளது தொடர்ந்து தொகைநூல்கள் , ஐம்பெரும் சிறுங்காப்பியங்கள் , பதினெண் கீழ்க்கணக்கு இலக்கணங்கள் நிகண்டுகள் கம்பன் சில புராணங்கள் சில நூல்கள் இடைக்கால நூல்கள் என ஆறு இயல்களில் காலவரையறை தொகுக்கப்பட்டுள்ளது இவற்றில் வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி சொன்ன கருத்துக்கள் கோர்வையாக தொகுக்கப்பட்டுள்ளது பின்னிணைப்பில் வையாபுரிப் பிள்ளை எழுதிய பதிப்பித்த நூல்களின் பட்டியல் அவரது வரலாறு அவரை மேற்கோள் காட்டிய அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் போன்ற செய்திகள் உள்ளன திருநெல்வேலியில் இந்த நூலை வெளியிட்டுப் பேசிய எட்டயபுரம் அரசர் தமிழில் இந்த முயற்சி மிக முக்கியமானது லாபம் கருதாது என்று கூறினார் இது வெளியிட்ட அன்றே 200 பிரதிகள் உடனே விற்று விட்டன.