மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள்

 Publisher: பரிசல் பதிப்பகம்
 Published: ஏப்ரல் 2024
 Category: கதை தொகுப்பு
 Pages: 104

தோல்பாவை கூத்து நிகழ்ச்சிகளிலும் கரகாட்டத்தில் இடை நிகழ்ச்சியிலும் வாய்மொழியாக சொல்லப்பட்ட நாட்டார் கதைகளின் தொகுப்பு. இந்த நூலில். 29 கதைகள் உள்ளன. சில கதைகள் தோல்பாவை கூத்துநிகழ்வில் இப்போதும் நடத்திக் காட்டப்படுகின்றன. சில கதைகள் கட்டுவாக்கிய கதைகள் என்று பெயர் பெற்றன சில கரகாட்ட நிகழ்ச்சியில் சொல்லப்பட்டன, சில கதைகள் கலைஞர்களால் சொல்லப்பட்டவை. இந்த நூலில் உள்ள 29 கதைகளும் கேட்டவாறு சொல்லப்படவில்லை ஒவ்வொரு கதைகளுக்கும் வழக்காறுகளுக்கும் உள்ள தொடர்பு நூலாசிரியர் சேகரித்த போது ஏற்பட்ட அனுபவம் கதைகளை சொல்லியவர் சொன்ன விஷயங்கள் என எல்லாம் கலந்து சொல்லப்படுகிறது. இந்தக் கதைகள் தொடர்பான பழமொழிகள் வழக்குத் தொடர்கள் இப்போதும் வழக்கில் உள்ளன பேசவும் படுகின்றன இந்தக் கதைகளில் பெரும்பாலானவை நகை உணர்வுடன் உள்ளவை என்பது இவற்றின் தனிச்சிறப்பு.